பக்தர்களால் விகாரைக்கு பூஜையாக வழங்கப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தலைமை பிக்கு ஒருவர், மற்றொரு பிக்குவை கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிலியந்தலை,கொட்டகெதர ஸ்ரீ கங்காராம விகாரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பிக்கு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். தாக்குதல் நடத்திய பிக்கு தலைமறைவாகி இருந்த நிலையில், பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.










