தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் சீன மொழிக்கு இடம் – தமிழை காணோம்!

தாமரைக் கூட்டு  கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான நுழைவுச்சீட்டு என குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியான, நுழைவுச்சீட்டு படம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாகவும்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் எனவும்,

உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும் எனவும் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது.

மேலும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உள்நுழைவு கட்டணம் 20 டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை,  நுழைவுச்சீட்டில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் இருந்தாலும் தமிழ் இருக்கவில்லை, அந்த மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது எனவும் விமர்சனம் எழுந்தது.

எவ்வாறெனினும் இவ்வாறான ஓர் நுழைவுச்சீட்டு விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதுவரையில் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு –

அதேவேளை, மேற்படி நுழைவுச்சீட்டு போலியானது என சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles