பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதையடுத்து திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கும்.
ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்கு முன்னர் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே சேவை இடம்பெறும்.
இதேவேளை, அந்த திணைக்களத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள் அன்றைய தினம் வழங்கப்பட மாட்டாது.
எக்காரணம் கொண்டும் திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யாத எவரும் அன்றைய தினம் வரவேண்டாம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.










