பிரதமர் பதவி குறித்து கோட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பு

“அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், எனக்குப் பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் யார் முடிவு எடுத்தது?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

“நான் பதவி ஆசை பிடித்தவன் என்றால் ஜனாதிபதிப் பதவியிலிருந்தே விலகியிருக்கமாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று ஆர்வம் காட்டி வருகின்றது எனவும், குறித்த கட்சியின் பிறிதொரு குழு தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றது எனவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்படி விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

“எனக்கு மட்டுமல்ல ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் பதவி ஆசை இல்லை. மக்களின் அமோக ஆணையுடன்தான் ராஜபக்சக்கள் பதவிக்கு வந்தார்கள். இதனை எதிரணியினரும், தாங்கள் நினைத்த மாதிரி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது பிரதமர் பதவி வகிக்கும் தினேஷ் குணவர்த்தன அந்தப் பதவிக்குரிய முழுத் தகுதிகளையும் கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த அரசியல்வாதிகளுள் அவர் முக்கியமானவர்” – என்றும் கோட்டாபய மேலும் கூறியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles