இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் காலத்திற்கு முற்பட்ட உயிரினம்

இலங்கை கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் டைனோசர்களின் ஆட்சிக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்செயலான ஆய்வு செயற்பாடுகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் கடற்கரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டாலும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் ஜெல்லிமீன்கள் குறித்து முறையான ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.

இலங்கையின் வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று இந்த விஞ்ஞானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முற்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் வசிப்பதாக முன்னர் அறியப்படாத குறைந்தது 10 இனங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சியானது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு “Waya-jel-Survey” என பெயரிடப்பட்டது.

அறிவியலுக்குப் புதிதாக ஒரு ஜெல்லிமீன் இனத்தைக் கண்டுபிடித்தது இதன் சிறந்த பிரதிபலனாகும். பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆய்வுக்கு ‘கெரிப்டியா வயம்ப’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஜெல்லிமீன் இனம் இதுவாகும். அத்துடன் வடக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் நடத்தப்பட்ட உயிரியல் ஆய்வுகளில் கெரிப்டியா இனம் முதலாவது உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles