‘தேசிய பேரவை’யில் மூன்று மலையக தமிழ் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. மற்றும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரே இவ்வாறு இடம்பெற்றுள்ளனர்.

“தேசிய பேரவை” என்ற பெயரிலான பாராளுமன்ற குழு தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் கடந்த (20) ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் தலைமையிலான இந்த குழுவில் 35 பேர் இடம்பெறுவர்.
கட்சி தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
