கொழும்பு 15 , முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயால் 80 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளன.
நேற்றிரவு 7.30 மணியளவில் குடியிருப்பில் பரவிய தீ, கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் , கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக சம்பவ இடத்தில் இன்று(28) இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
தீக்கிரையான வீடுகளில் வசித்தவர்கள் தற்போது மோதர உயன சனசமூக நிலையம் மற்றும் விகாரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 220 பேர்வரை இடம்பெயர்ந்துள்ளனர்.
