பத்தனையில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!

கொட்டகலை, திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில் இவ்வாறு வீட்டின் பின்பகுதிக்கு இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனை கண்ட வீட்டாளர்களும், பிரதேசவாசிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், நுவரெலியா வனஜீவராசிகள் காரியாலயத்திற்கும் அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகாரிகள் வரும் வரை, அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles