காணாமல்போன பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவனை தேடும் நடவடிக்கைகள் கடந்த 03 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டன.இருந்த போதிலும், நேற்று மாலை வரை, மாணவன் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதியை விட்டு வெளியே வந்ததும்,இம்மாணவன் கைத்தொலைபேசியை எடுத்துச் சென்றுள்ளார். எனினும் கைத்தொலைபேசி இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதால், குறித்த மாணவனை தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக தெரியவருகின்றது.
தனது மகன், இவ்வாறு காணாமல் போவதற்கு எந்த காரணமும் இல்லை எனப் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாணவனின் தாயார் திருமதி ஜி.எஸ்.என்.பெரேரா பேராதனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த மாணவன் கடந்த (02) இரவு கடிதமொன்றை எழுதிவிட்டு விடுதியை விட்டு வெளியேறியுள்ளார்.
