போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோரை தாக்கிய இளைஞர்

போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோர், சகோதரி ஆகியோரை மகனுடன் இருந்த இளைஞர் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கொடிகாமம் பாலாவி வடக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

கொடிகாமம் – பாலாவி வடக்குப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர். இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் தேடிச் சென்றுள்ளனர்.

பாலாவி வடக்குப் பகுதியில் உள்ள பற்றைக்குள் தமது மகன் இன்னொரு இளை ஞருடன் கசிப்பு அருந்தியதைக் கண்டனர். அதைத் தடுத்து மகனை வீட்டுக்கு அழைத்து வர முற்பட்டவேளை மகனுடன் இருந்த இளைஞர்,பெற்றோர்,சகோதரி ஆகியோரையும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், மகன், மகள் ஆகியோர் காயமடைந்தனர். அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவேளை தாக்குதல் மேற்கொண்ட கெற்பேலி மேற்கைச் சேர்ந்த இளைஞரும் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதில் 42 வயதான தந்தை, 21 வயதான மகன் மற்றும் 25 வயதான இளைஞர் ஆகி யோர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மதுபான விலை அதிகரிப்பின் பின்னர் கெற்பேலி, பாலாவிப் பகுதியிலுள்ள பற்றைக் ளில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதெனவும் உரிய தரப்பினருக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles