ஆசிய கிண்ணத்தை வெல்லுமா இலங்கை மகளிர் அணி? இன்று பலப்பரீட்சை!

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில உள்ள சில்ஹெட் நகரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.

7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரைஇறுதியில் தோற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.

இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

Related Articles

Latest Articles