இரத்தினபுரி ஹொலிப்பிடிய பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்தவரை, இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து, ஐந்து கிராம் மற்றும் 450 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.56 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
இவர், நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பாணந்துறையிலிருந்து ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு வந்து, இரத்தினபுரி ஹொலிபிடிய பகுதியிலும் ஏனைய சுற்று வட்டார பிரதேசங்களிலும் விற்பனை செய்திருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேநேரம், இரத்தினபுரி குடுகல்வத்த பிரதேசத்திலும் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










