எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு

இலங்கையில் இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒக்டென் 92 பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக 370 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 415 ரூபாவாகும்.

எனினும், ஒக்டென் 95 பெற்றோல், சுப்பர் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதேவேளை, எரிபொருள் விலை குறைவடைந்தாலும் பஸ் மற்றும் ஆட்டோ கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles