நல்லிணக்கத்துக்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப குழு!

நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான இந்த குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலிசப்ரி, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும்,
வடக்கு, கிழக்கு போருக்கு பின்னரான மீள் குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனார் விவகாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

Related Articles

Latest Articles