வாத்துவ பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் தென் கொரிய நாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குதென் கொரிய பிரஜையான 43 வயதுடைய இவர் நேற்று (17) மாலை ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
இன்று (18) காலை 8.30 மணியளவில் நீச்சல் தடாகத்தில் சடலமாக இருப்பதை அவதானித்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
