13 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டுப் பெண் கைது

சுமார் 13 கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ 553 கிராம் கொக்கெய்னுடன் 26 வயதான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. .

பிரேசிலில் இருந்து டோஹா, கட்டார் ஊடாக நாட்டிற்கு வந்த யுவதி ஒருவரின் சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக, அவரை விசேட சோதனைக்கு உட்படுத்திய போது, ​​அவரது பயணப் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த ஐந்து டின்களில் உணவுப்பொருட்கள் எனக்கூறி மறைத்து வைத்திருந்த குறித்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  ஆரம்ப விசாரணையின் பின்னர், சுங்க பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக வழக்குப் பொருட்களையும் சந்தேக நபரையும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைத்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles