9 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பன்முக திருவிழா

2023 ஜனவரி 6மற்றும் 7 ஆம் திகதிளில் இந்தியாவின் சென்னை வர்த்தக மையத்தில் ஒன்பதாம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெறவுள்ளது.

அம்மாநாட்டில் இந்திய அரசு , தமிழக அரசு ஆதரவுடன் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாநில – மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் , தொழிலதிபர்கள் ,கல்வியாளர்கள் , கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

60 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 1500 பேரும் இந்தியாவில் சுமார் 3,000 க்கு மேற்பட்டவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வு பற்றி இலங்கை ஊடகத்திற்கு காணொளி வாயிலாக உலகத் தமிழ் வம்சாவளி தலைவர் செல்வகுமார் நேர்காணலில் கலை கலாச்சாரம் பாரம்பரிய உணவு உடை போன்றவைகளை அயலகத் தமிழர்கள் அறியும் வகையில் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மேலும் பல்வேறு நாடுகளில் வாழும் சாதனைகளைப் போற்றும் விதமாக சாதனைத் தமிழன் விருது. சாதனை தமிழ் நிறுவன விருது. நல்லாசான் விருது போன்ற நிகழ்வுகளும் தமிழரின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் சிலம்பம் பறையாட்டம் பரதநாட்டியம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

அத்துடன் சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் டீ2டீ அநநவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொழில் செய்ய வாய்ப்புகளை தேடுவோருக்கு கருத்தரங்கமூலம் வாய்ப்புகள் ஏற்படுத்தவும் பல்வேறு தொழில் கூட்டமைப்பு தலைவர்களை சந்திக்கவும் ஒரே இடத்தில் அனைத்து நிகழ்வுகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அமர்வுகளாக நிகழவுள்ள இந்த நிகழ்வில் இறுதியாக தென் இந்திய நடிகர் நடிகைகள். மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் திரை கலைஞர்களை உள்ளடக்கிய 15 ஆம் ஆண்டு எடிசன் திரை விருதுகள் நடைபெற உள்ளது இதில் 2022 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட தமிழ் திரைப்படங்களில் சிறந்த திரை கலைஞர்களுக்கு விருது வழங்க ப்பட உள்ளது.

நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அயல்நாடுகளில் உள்ள தமிழ் பின்னணி பாடகர்கள் நடன மணிகள் குறும்படம் தயாரிப்பாளர்கள் தொழில் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்கள்.போன்றவர்களையும் ஊக்குவிக்கப்பட உள்ளது என உலக தமிழ் வம்சவலி அமைப்பு தலைவரும் எடிசன் விருது குழு தலைவருமாகிய செல்வக்குமார் தெரிவிக்கின்றார்.

இந்நிகழ்விற்கு இலங்கையிலிருந்து சென்னைக்கு சென்று தங்கும் வசதியுடன் அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பு கட்டணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இலங்கை தமிழர்கள் ஒன்றிணைக்கும் விதமாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் இலங்கை செயற்பாட்டாளர் திரு தியாகு சுப்பிரமணியம் அவர்களை நியமனம் செய்துள்ளோம் எனவும் இந்நிகழ்விற்கு வர விருப்பம் தெரிவிப்போர் தியாகு சுப்பிரமணியத்தை அணுகலாம் என செல்வக்குமார் தெரிவித்தார்.தொடர்புகளுக்கான எண்கள் 077-7757815 அல்லது 0707757815 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

கடந்த வருடம் நடைபெற்ற இந்நிகழ்வில் பல இலங்கை கலைஞர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அனைவரும் வாரீர் தமிழால் இணைவோம்.

Related Articles

Latest Articles