’22’ குறித்து இன்று விவாதம்! மொட்டு கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி!!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(20) மற்றும் நாளை(21) விவாதம் நடத்தப்படவுள்ளது.

அரசிலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு நேற்று(19) கூடியது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

22 இற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப்படும் என சரத் வீரசேகர, எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles