ஆட்சி கவிழும் -ஜனாதிபதி பதவி இல்லாமல்போகும்! அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

” உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முற்படுமானால், நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் ஜனாதிபதி பதவி ஆகிய இரண்டையும் இழக்க நேரிடும்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் உதய கம்மன்பில மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் வீதியில் இறங்குவோம் என 16 எதிர்க்கட்சிகளும் கூட்டாக அறிவித்துள்ளன.

நாட்டில் மக்கள் புரட்சி வெடித்தது. கொந்தளிப்பு நிலை இன்னும் முழுமையாக அடங்கவில்லை. ஓரிரு மாதங்கள் மக்கள் அமைதியாக உள்ளனர். எனவே, அவர்களை மீண்டும் வீதிக்கு இறக்கும் வேலையை அரசாங்கம் செய்யக்கூடாது.

எனவே, உள்ளாட்சி தேர்தலை பிற்போடுவதற்கு – அல்லது அங்கு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு ஆசைப்பட்டால், நாட்டில் மீண்டும் குழப்பம் ஏற்படும். மக்கள் கொந்தளிப்பார்கள். நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் ஜனாதிபதி பதவி இரண்டையும் இழக்கும் அபாயம் ஏற்படும். ” – என்றார்.

Related Articles

Latest Articles