இன்று நள்ளிரவுடன் சிற்றுண்டிகளின் விலை குறைகிறது

சிற்றுண்டிகளின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சைனிஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதற்கமைய, பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாகவும், சாதாரண தேநீரின் விலை 30 ரூபாவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருமெனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles