அரசியலமைப்பு பேரவை குறித்து நாளை முக்கிய பேச்சு!

அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளைய தினம் கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போதே அது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உள்ளடங்குவதுடன் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள், சுயாதீன ஆணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிரேஷ்ட நீதித்துறை மற்றும் அரசாங்க பதவிகளுக்கான நியமனங்களை அங்கீகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வர்.

அதேவேளை, அரசியலமைப்பு பேரவைக்கு தமது வேட்பாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles