பாதீட்டு அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் நேற்று நடைபெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் பங்கேற்றார்.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான அடிப்படை சட்டமூலம் குறித்து இங்கு வருகை தந்திருந்த உறுப்பினர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

இச்சட்டமூலத்தை மேலும் விரிவாக ஆராய்ந்து இரண்டு வாரங்களில் மீண்டும் கூடிக் கலந்துரையாட இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த விசேட கூட்டத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்‌ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாந்து, வாசுதேவ நாணயக்கார, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன, தயாசிறி ஜயசேகர, கபீர் ஹாசிம், குமார வெல்கம, சாகர காரியவசம், ஷான் விஜயலால். சில்வா, விமல் வீரவன்ச, (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, வீரசுமண வீரசிங்ஹ, வி. இராதாகிருஷ்ணன் மற்றும் கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles