இலங்கை அணிக்கு கிடைத்த டொலர் எவ்வளவு தெரியுமா?

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை அணிக்கு மொத்தமாக 230,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகை (சுமார் 83 கோடியே 78 இலட்சம் ரூபா) கிடைத்துள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. எனினும் சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற இலங்கை அணிக்கு 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதுடன், அணியின் 4 வெற்றிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருக்கும் பரிசு விபரத்தின் அடிப்படையில், உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 58 கோடி இலங்கை ரூபாய்) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 29 கோடி இலங்கை ரூபாய்) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles