சமையல் பாத்திரங்களை கொள்ளையிட்ட இளைஞன் கைது!

துன்னாலை ஆலயமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் துன்னாலையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்திலிருந்த சமையல் பாத்திரங்கள், மின் உபகரணங்கள் ஆகியன திருடப்பட்டிருந்தன. இதுதொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதற்கமைய நேற்று முன்தினம் திங்கட்கிழமை (14) இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் ஆலோசனைக்கு அமைய உபபொலிஸ் பரிசோதகர் இரட்ணாயக்கா தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles