தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம், பிணை வழங்கியுள்ள நிலையில், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

டிண்டர் (TINDER) உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை (APPS) பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய டேட்டிங் வலைத்தளங்களையும் பயன்படுத்த நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனுஷ்க குணதிலக்கவை, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு நாளாந்தம் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அவருக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முறைப்பாட்டாளர் தரப்பை சந்திப்பதற்கும், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் 2ம் திகதி 29 வயதான யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Related Articles

Latest Articles