கிளங்கள் வைத்தியசாலையின் அவலநிலை!

ஹட்டன், டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையின் பொது மலசலக்கூடம் மிக மோசமான நிலையில் இருப்பதாக நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நோய்வாய்பட்டு வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், இவ்வாறான அசுத்தமான மலசலகூடங்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு மேலும் அசெளகரியம் ஏற்படுகிறது.

அத்துடன் கிருமித்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் இருந்தும், நிர்வாகத்தின் அலட்சியபோக்கால்தான் இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் நிதி பங்களிப்புடன் குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது. பாரத பிரதமர் மோடி, நோர்வூட் வந்து அதனை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles