‘மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நாவரை கொண்டுசென்றோம் – ராதா பெருமிதம்!

” மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா – இராகலை பிரதேசத்தின் மலையக மக்கள் முன்னணியின் தோட்டதலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களுடான சந்திப்பு ஒன்று இன்று (21.11.2022) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்டப்பகுதியே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 63 சதவீத மக்கள் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர் என சர்வதேச அமைப்புகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் கனவத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி அநுரகுமார திஸாநாயக்கவும், எமது தலைவர் மனோ கணேசனும் கூட்டு பிரேரணையொன்றை கொண்டுவந்தனர். இவ்விவாதத்தில் பங்கேற்று எமது மக்களின் பிரச்சினைகளை நாம் பட்டியலிட்டோம்.

எனினும், ஒரு சிலர் இதனை விமர்சிக்கின்றனர், மலையக மக்கள் பிற்படுத்தப்பட்ட சமூகம் அல்ல என குறிப்பிடுகின்றனர். இந்த பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பது இந்தியாவில் சாதி அடிப்படையில் ஒதுக்கப்படுவது. அந்த முறை இலங்கையில் இல்லை. மலையக மக்கள் பின்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையே நாம் கூற விளைந்தோம்.

200 வருடங்கள் கடந்தும் வாழ்க்கை நிலை மாறவில்லை. இன்னமும் லயன்கள் உள்ளன. எமது முதாதையர்கள்தான் இந்நாட்டை வளமாக்கினர். அப்படி இருந்தும் நாம் பின்தள்ளப்பட்டுள்ளோம்.

ஐ.நா. பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களை நாம் சந்தித்தோம். ஆவணம் கையளித்தோம். அடுத்த முறை இலங்கை வரும்போது மலையகம் வருவதாக சொன்னார்கள். ஆனால் எமது பிரச்சினை இம்முறை ஐ.நா. அறிக்கையில் இடம்பெறும். எமது பிரச்சினை ஐ.நா.வரை சென்றதுகூட வெற்றிதான்.

மக்களிடம் வாக்குகளைப்பெற்று நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றம் செல்கின்றோம். மக்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்கின்றோம். தீர்வுகளை முன்வைக்கின்றோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles