மயான பூமியை கையகப்படுத்த முற்படும் தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதுளை, ஹாலிஎல – டிக்வெல்ல தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
” தமது முதாதையர்களின் உடல்கள் இங்குதான் புதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுடுகாட்டு தோண்டப்படுகின்றது. இது எமக்கு மன வேதனையளிக்கின்றது. எலும்பு கூண்டுகள் வெளியில் வருகின்றன. எனவே, எமக்கென எஞ்சியுள்ள இந்த சுடுகாட்டையாவது நிர்வாகம் விட்டு வைக்க வேண்டும்.” – என தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
” அலிபேர உற்பத்தி என்ற போர்வையில் சுடுகாடும் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இதனை எதிர்த்தால் தோட்டத்தில் வேலை இல்லை என்கின்றார்கள். எனவே, எமக்காக குரல் கொடுக்க தலைவர்கள் முன்வரவேண்டும்.” – எனவும் மக்கள் அழைப்பு விடுகின்றனர்.










