ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு நேரடி பதிலை வழங்குவதற்கு பஸில் ராஜபக்ச மறுத்துவிட்டார்.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார், ரணில் விக்கிரமசிங்க என்று சிலர் கூறுகின்றனர், சின்னம் மொட்டு கட்சி எனவும் கூறப்படுகின்றது. இது உண்மையா?” – என எழுப்பட்ட கேள்விக்கே ,நேரடி பதிலை வழங்காமல் நழுவியுள்ளார் பஸில்.
” ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினை பற்றியே தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்ற அடிப்படையில், உள்ளாட்சிசபைத் தேர்தலையே அடுத்து எதிர்பார்க்கின்றோம். ” – எனவும் பஸில் குறிப்பிட்டார்.










