கம்பஹா மாவட்டத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்கு!

கம்பஹா மாவட்டத்தில் நான்கு பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.
முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வரவள்ளது.

Related Articles

Latest Articles