கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து – நால்வர் காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில்  உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று  (05) பிற்பகல்  இடம்பெற்றுள்ளது.

நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள  தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து ஏற்றிச்   சென்ற உழவு இயந்திரத்தின் கொக்கி – கழன்று அதன் பெட்டி தலைகீழாக  வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதில் பயணித்த நால்வரும் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் , இதில்  படுகாயம் அடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

டி. சந்ரு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles