தலவாக்கலை தீ விபத்து – 7 வீடுகள் தீக்கிரை – 49 பேர் நிர்க்கதி ( Update)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. மேலும், 5 வீடுகள் பகுதியளவில் சேதமமைந்துள்ளன. இதனால் 12 குடும்பங்களை சேர்ந்த 49 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீ விபத்த ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்தனர். அதற்குள் தீ வேகமாக பரவியது. பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருடன் இணைந்து சுமார் மூன்று மணித்தியாலயங்களுக்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது வீடுகளில் வசித்த பெருந்தொகையானோர் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்ததால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தீயினால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களில் 3 குடும்பங்கள் மாத்திரம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 9 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி மற்றும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles