வாக்குச் சீட்டு தொடர்பில் வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முடிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி திருமதி கங்கானி லியனகே தெரிவித்தார்.

அச்சுப் பிழைகள், வாக்குச் சீட்டு திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் சரிபார்த்து, அதன் துல்லியத்தை தேர்தல் ஆணைக்குழு மறு ஆய்வு செய்து, அச்சிடுதல் தொடர்பான பணிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றார்.

பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சிடும் பணி ஏற்கனவே அரச அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அச்சக அலுவலகத்தின் தலைவர் திருமதி கங்கானி லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles