“Slave Island” இன்று முதல் கொம்பனி வீதியாக மாற்றம்

“Slave Island” என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனிவீதி” என பெயர் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.நாட்டின் 75 ஆவது

சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்பெயரை மாற்ற முடிவு செய்ததாக பிரதமர் கூறினார்.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு நிலைமையை அறிவித்து, தீர்மானத்தை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்.

சிலேவ் ஐலண்ட் “Slave Island” என்ற பெயர் மூன்று மொழிகளில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) உச்சரிக்க வசதியாக மாற்றப்பட்டது.

இது தொடர்பில் தபால் மாஅதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலனித்துவ காலத்தில் சிலேவ் ஐலண்ட் “Slave Island” என்ற பெயர் பயன்படுத்தப்பட்டாலும், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ‘கொம்பனி வீதி’ என்ற பெயரே பயன்படுத்தப்பட்டது.

மூன்று மொழிகளிலும் இனிமேல் கொம்பனி வீதி, என்றே அழைக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (03) வெளியிடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles