வெல்லம்பிட்டி வர்த்தகரின் சடலம் – வெளியான முக்கிய தகவல்கள்

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ரொஷான் வன்னிநாயக்கவின் பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் குளியல் தொட்டியில் சடலமாக நேற்று முன்தினம் மீட்கப்பட்டிருந்தார்.

சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது நிர்வாணமாக அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததுடன் ஆணுறைகளும் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சடலம் கண்டெடுக்கப்பட்ட குளியல் தொட்டியின் அருகிலும் சில இரத்தக் கறைகள் காணப்பட்ட நிலையில் இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வர்த்தகர் கொலையில் முதற்கட்ட விசாரணைகளின் படி அவர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் உடலை இழுத்து குளியல் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதோடு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் பல ஆணுறைகளும் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த தொழிலதிபர் 50 வயதுடையவர் மற்றும் அவர் திருமணமாகாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தொழிலதிபரின் பணப்பையில் இருந்த 4 கடனட்டைகள் காணாமல் போயுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த கடனட்டைகளை பயன்படுத்தி 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வர்த்தகரின் கடன் அட்டையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை குறித்த வர்த்தகரின் கொலையில் பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படாததால், அருகில் உள்ள ஏனைய கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கெமராக்களை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கோடீஸ்வர வர்த்தகரின் கார் நீர்கொழும்பிலுள்ள வீடு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles