” எங்கள் ‘ஹெலிகொப்டர்’ கூட்டணியை வீழ்த்துவதற்கான வல்லமை மொட்டு கட்சிக்கு கிடையாது. தேர்தல் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு ஓட வேண்டியநிலை பஸிலுக்கு ஏற்படும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பதிலடி கொடுத்துள்ளார்.
விமல் அணியின் ‘ஹெலிகொப்டர்’, ராஜபக்சவின் அரசியல் கோட்டையில் உடைந்து விழும் என மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே விமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
” குட்டி தேர்தலில் மொட்டு கட்சி படுதோல்வி அடையும். எமது ஹெலிகொப்டரை வீழ்த்துவதற்கான ஏவுகணைகள் தற்போது ராஜபக்சக்களிடம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தாலும் அவை தற்போது புஷ்வாணங்களாகியிருக்கும்.
மொட்டு கட்சியை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டுவந்த ஸ்தாபகர் என்ற நாமத்துடனேயே பஸில் ராஜபக்சவுக்கு அமெரிக்கா செல்ல நேரிடும்.” – எனவும் விமல் குறிப்பிட்டார்.
