அடிப்படை செலவுகளுக்காக ரூ. 770 மில்லியனை கோருகிறது தே.ஆணைக்குழு

உள்ளூராட்சி சபை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 770 மில்லியன் ரூபாவை இந்த மாதத்துக்கு பெற்றுத்தர வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு அவசியமான அடிப்படை செலவினமாக இந்த மாதத்துக்குள் 770 மில்லியன் ரூபா மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளது. மேற்படி நிதியை ஒரே தடவையிலோ அல்லது தவணை முறையிலே பெற்றுத்தருவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூராட்சி சபை தேர்தல் செலவினங்களுக்காக இதற்கு முன்னர் நிதி அமைச்சு சுமார் 37 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் தினம் வரைக்குமான காலத்திற்குள் 04 பில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles