“சந்தா மோசடி” – அரவிந்தகுமாருக்கு எதிராக ம.ம.மு. சட்டநடவடிக்கை!

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தா பணத்தை சூறையாடி, நிதி மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாக சபை கூட்டம் தலவாக்கலையில் நேற்று (05.02.2023) நடைபெற்றது.

முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னணியின் செயலாளர் எஸ். விஜேசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா உட்பட கட்சி, தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராதாகிருஷ்ணன் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் முன்னணியின் விசேட நிர்வாக சபைக்கூட்டம், மலையக தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடைபெற்றது. இதன்போது பதுளை மாவட்டத்தில் எமது சங்கத்துக்குரிய சந்தாவை அபகரிப்பதற்கு முற்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற ஸ்தாபகத்தை சேர்ந்தவர்கள், மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தாவை ஐக்கிய தொழிலாளர் முன்னணிக்கு அனுப்பிவைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர். மேற்படி ஸ்தாபகத்தின் தொழில் உறவு அதிகாரி எனக் கூறப்படும் நமச்சிவாயம் என்பவராலேயே இக்கடிதம் அனுப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்துசென்ற அரவிந்தகுமாரே ஐக்கிய தொழிலாளர் முன்னணியை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் எமது சங்கத்துக்குரிய சந்தாவை கபடத்தனமாக சூறையாடுவதற்காக கடிதங்களை எழுதியுள்ளார். இது பாரதூரமான விடயமாகும். நிதி மோசடியும்கூட. எனவே, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு நடந்துள்ளதா என்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.” – என்றார்.

அதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனக்கூறும் அரசு, சுதந்திர தினத்தை பெருமெடுப்பில் கொண்டாடியுள்ளது. தெற்கில் சுதந்திர தினம் இடம்பெற்றாலும் வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வழமைபோல இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டில் இடம்பெறவில்லை. மக்களுக்கு உண்ண வழி இல்லை. மருந்துகள் இல்லை. இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே மக்கள் இப்படி செயற்பட்டனர் என்பதை உணர முடிகின்றது.

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும். ஒரு சில சமூகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சுதந்திரத்தை கொண்டாடுவது அர்த்தமற்ற செயலாகும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles