நான்கு போலி பொலீசார் கைது

நிட்டம்புவ, மைம்புல பிரதேசத்தில் நேற்று (08) இரவு பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் விளையாட்டு உடையில் இரு சந்தேக நபர்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், அவர்கள் பொலிஸ் படையின் அங்கத்தினர் அல்ல என்பதை உறுதிசெய்த பின்னர், நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் காரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டது.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு ஜோடி கைவிலங்குகள் மற்றும் மூன்று போலி இலக்கத் தகடுகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 25,26,27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரியா, கிந்தோட்டை மற்றும் எல்லக்கலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் நால்வரும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றச் செயல்களை மேற்கொள்வதற்காக பயணித்துள்ளார்களா என்பது தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles