இலங்கை ஆசிரியர் சேவைக்கான அரச சேவையில் பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான காலக்கெடு ஜனவரி 27ம் தேதியுடன் முடிவடைந்தது.
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடைபெற்று வருகின்றது.
