பாகிஸ்தானின் கூட்டுப்படைகளின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கான  பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்தார் .

ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நட்பு நாடுகளாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்தார்.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஜெனரல் மிர்சா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ரியர் அட்மிரல் அப்துல் பாசித் பட் தலைமையிலான பாகிஸ்தான் கடற்படைக் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles