தேர்தல் இடைநிறுத்தப்படுமா? முக்கிய மனுமீது இன்று விசாரணை

நாட்டில் நிலவும் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல்ஒருவரினால் தாக்கல்செய்யப்பட்ட ரிட்மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேற்படி மனுவானது நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மனு மீதான விசாரணை கடந்த (10) நடத்தப்பட்ட போதும், அதன் முடிவில் இதுதொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மனுமீதான விசாரணையை (23) ஒத்திப்போடுவதற்கும் உச்சநீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், மேற்படி மனுமீதான விசாரணையை எதிர்வரும் (23) முன்பதாக விசாரணைக்கு எடுக்குமாறு மேற்படி கேர்ணலினால் அவரது சட்டத்தரணிகள் மூலம் மனுவொன்று தாக்கல்செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியிலேயே மேற்படி மனுமீதான விசாரணையை இன்றைய தினத்தில் மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Related Articles

Latest Articles