நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நேற்று நள்ளிரவு முதல் கிட்டியுள்ளது.
அரசமைப்பின் 70 (அ) சரத்தின் பிரகாரமே ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் கிட்டியுள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்வரை, பொதுத்தேர்தலொன்று நடைபெற்று, நாடாளுமன்றம் கூடும் முதல் நாளில் இருந்து ஓராண்டுக்கு பிறகு, நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.
இந்த ஏற்பாடு 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக மாற்றியமைக்கப்பட்டது. ஒரு வருடம் என்ற காலப்பகுதி இரண்டரை வருடங்களாக்கப்பட்டன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் 21 ஆவது திருத்தச்சட்டம் என்பவற்றிலும் இந்த ஏற்பாடு மாற்றப்படவில்லை.
அந்தவகையில் ஜனாதிபதி தான் கருதும் பட்சத்தில் 9 ஆவது நாடாளுமன்றத்தை எந்நேரத்தில் வேண்டுமானாலும் கலைக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் அவரின் கைகளுக்குள் வந்துள்ளது.
