டிஜிட்டல் தராசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும்,
கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, ‘டிஜிட்டர் தராசு’ முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டியாகலை, பொகவானை லொய்னோன், ஆகிய தோட்ட பகுதிகளில் கொழுந்து நிறை அளவிடுவதற்கு ‘டிஜிட்டல்’ தராசே பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
இதனால் தொழிலாளி ஒருவரிடமிருந்து நாளொன்றுக்கு 10 கிலோ மேலதிகமாக அறிவிடப்படுகின்றது என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல்
தாராசு, அதிகாரிகளால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது.

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் அதிகாரிகளால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கைப்பற்றப்பட்ட பச்சை தேயிலை கொழுந்து அளவீடு் செய்யப்படும் டிஜிட்டல் தாராசு, மூன்று ஆண்டுகளாக முத்திரை பதிக்கப்படாமல் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.

இது தொடர்பில் கடந்தவாரம் பேச்சு நடைபெற்றது. இதன்போது டிஜிட்டல் தாரசு தேயிலை அளவீட்டுக்கு
பயன்படுத்தமாட்டாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் டிஜிட்டர் தராசு வந்துள்ளது.

இதற்கு தாம் எதிர்ப்பை தெரிவித்ததால், கொழுந்தை பொறுப்பேற்க தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது என தொழிலாளர்கள் கூறினர். இந்நிலையிலேயே நீதிகோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்.

Related Articles

Latest Articles