சிவனொளிபாதமலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகர்களின் அதிகரிப்பையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் வழிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் வீசப்பட்டு காணப்படுவதாக தெரியவருகிறது.பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் சிவனொளிபாதமலையை அண்டியுள்ள வனப்பகுதியும் சேதமாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

இவ்வாறு யாத்திரிகர்கள் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் உறைகளை ஆங்காங்கே வீசி எறிந்து விட்டு செல்வதால் அப் பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

Related Articles

Latest Articles