சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது!

பிலியந்தல – தெல்தர பகுதியில்  சொகுசு வீடொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் பிலியந்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளளனர்.

அத்துடன், சூதாட்டம் நடத்திய இடத்திலிருந்து 73 ஆயிரத்து 940 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர்களில் வீட்டு உரிமையாளரான பெண்ணும் அவரது உறவுமுறை மகளும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை , கெஸ்பாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles