கஞ்சாவுடன் இளம் பெண் கைது!

நான்கு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருத்த கஞ்சா பொதி மீட்கப்பட்டது.

இந்தத் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரான பெண்ணே கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண், மீட்கப்பட்ட கஞ்சா பொதியும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles