பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியில் முதலாம் இலக்க தேயிலை மலையில்
தொழிபுரிந்து கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் மீது சிறுத்தை பாய்ந்து
தாக்கியதில் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
காயங்களுக்கு உள்ளான ஆண் தொழிலாளி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு
மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ மாவட்ட
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளிக்கு கை , பகுதியிலேயே அதிகமான காயங்கள்
ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எஸ். சதீஸ்
