பேராதனை பல்கலையின் பொறியியல் பீட மாணவி உயிரிழப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் குறித்த மாணவி சுகவீனமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.குருணாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி, சில காலமாக மன அழுத்தத்தினால் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles