தேர்தல் நடைபெறும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர், திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 9 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிக்கைமூலம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles